School Morning Prayer Activities - 31.07.2019
Prepared by
Covai women ICT_போதிமரம்
திருக்குறள்:250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
விளக்கம்:
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
பழமொழி
Too much of
anything is good for nothing.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
இரண்டொழுக்க பண்புகள்
1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.
2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.
பொன்மொழி
ஆற்று நீரின் மென்மையான வருடலால்
கருங்கற்கள் கூழாங்கல் ஆக மாறுகிறது..
தன்மையான அணுகுமுறையால் முரடனும் மாறும் வாய்ப்புள்ளது.....
........புனிதர் சேவியர்.
பொது
அறிவு
1.2020 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
டோக்கியோ - ஜப்பான்
2. தமிழ்நாட்டில் பாரம்பரிய நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 2 நகரங்கள் எவை?
காஞ்சிபுரம், நாகப்பட்டினம்
English
words & meanings
Macaw - a
colorful large parrot
பஞ்ச
வர்ணக்கிளி.
மத்திய மற்றும் தென் அமெரிக்கா இதன் பிறப்பிடம்.
அனைத்துண்ணி
பல வண்ணங்களில் காணப்படும் பெரிய கிளி
ஆரோக்ய வாழ்வு
டார்க் சாக்லெட்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
Some
important abbreviations for students
• IRON -
International Rice Observational Nursery
• PWD -
Public Works Department
நீதிக்கதை
செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.
கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.
பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..
செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான்.
மற்ற
நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான்.
பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.
மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.
ஒரு
நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்.
நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.
செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.
"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.
அவன்
குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.
பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!
அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது.
அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்
பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.
அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை.
செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.
பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.
செங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள்.
விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் செங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான்.
மேலே
பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது.
நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான்.
அவன்
நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.
தன்
கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.
குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.
இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..
"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.
இனி
ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை''
என்று கடிந்தபடி ,செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.
"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.
இம்முறை வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஏனெனில் ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன்.
பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.
பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.
இந்த
நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான்.
பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி
இருந்தது.
அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.
தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.
அந்த
நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.
மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான்.
அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.
உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.
நாடு
திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான்.
அதன்
ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.
கோபத்தில்_செய்யப்படும்_எல்லாச் செயல்களும்_துயரத்தையே_தருகின்றன
மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..
"உன்னுடைய உண்மையான_நண்பன் #உனக்குப்_பிடிக்காத_செயல்களைச் செய்தாலும் அதை #உன்_நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."'
அன்புக்குப் பொறாமை இல்லை;
அறிவோ பதட்டப் படுத்தும்.
அன்பு இறுமாப்பாயிராது;
அறிவோ பெருமையைப் பறை சாற்றும்.
புதன்
கணக்கு & கையெழுத்து
ஒரு
சதுரவடிவ பூங்காவில் 8100 மரக்கன்றுகளை 90 வரிசையில் நடவு செய்ய முடிவு செய்தனர்.
வரிசையாகவும் சதுர வடிவிலும் மரம் நடவேண்டும் ..
கேள்வி:
ஒரு வரிசைக்கு எத்தனை மரக்கன்றுகள் வேண்டும் ???
விடை
:8100 மரங்கள் 90 வரிசையில் எனில் 1 வரிசையில்
8100/90 = 90
கையெழுத்துப் பயிற்சி - 8
இன்றைய செய்திகள்
31.07.2019
* 'தபால் துறை தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்' : புதிய அறிவிப்பாணையின் நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
* தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. மேலும் //ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் மிகவும் தனித்துவம் வாய்ந்த மருத்துவ குணம் மிக்க மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
* மலேசியாவின் மெலேகா நகரில் நடந்த உலக கோப்பை கபடி தொடரில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
* புதுடில்லி: மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும், தங்கப் பதக்கம் வென்றார்.
Today's
Headlines
🌸' New notification was filed in the High court by the Central
Government insists that the postal department examination can be written in
Tamil language
🌸The results of the National Teacher Eligibility Test were published in
the www.ctet.nic.in website.
🌸 The geologic code was given to garlic
which was the most unique medicinal plant in Kodaikanal mountain region.
🌸 India won the men's and women's championships in the World Cup Kabaddi
held in Melaka, Malaysia.
🌸 In the Masters sniper, 10m 'Air Rifle' category Anjum from Punjab won
the gold medal .
No comments
Post a Comment