School Morning Prayer Activities - 23.07.2019
🔮சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி- பிரதமர் வாழ்த்து.
🔮அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர்: செங்கோட்டையன்.
🔮சந்திரயான்-2’ஐ
தொடர்ந்து சூரியனின் கரோனா பகுதியை பற்றி ஆய்வு செய்ய வருகிற 2020ல் விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
🔮உத்திரபிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
🔮தொழில்நுட்பக் கோளாறால் தொடர்ந்து 3வது நாளாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
🔮இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான்' : நடுவர் தர்மசேனா ஒப்புதல்.
🔮துணை ராணுவ படையில் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
*இன்றைய திருக்குறள்*
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
*மு.வ உரை*:
நல்ல
விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
*கருணாநிதி
உரை*:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
*சாலமன் பாப்பையா உரை*:
இனிய
முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
*பொன்மொழி*
உண்மையை மறைக்காமல் சொல்லும் மனவலிமை வேண்டும்.
- மகாத்மா காந்தி
♻♻♻♻♻♻♻♻
*பழமொழி*
Slow and
steady wins the race.
முயற்சி திருவினையாக்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important Used Words*
Judge, Justice
நீதிபதி
Juggler
கண்கட்டி வித்தைக்காரர்
King அரசர்
Mahout யானைப்பாகன்
Magistrate
நீதிபதி, நியாயாதிபதி
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's
grammar*
*Adjectives*
Here are
some simple rules to keep in mind when forming comparatives and superlatives.
RULE 1
For most
adjectives, ‘er’ is added for the comparative form and ‘est’ for the
superlative form.
Tall –
Taller – Tallest,
Strong –
Stronger – Strongest,
Short –
Shorter – Shorter
Kind –
Kinder - Kindest
RULE 2
For
adjectives ending with ‘e’, ‘r’ is added for the comparative form and ‘st’ for the
superlative form.
Wise – Wiser
– Wisest
Large –
Larger – Largest
Nice – Nicer
– Nicest
Fine – Finer
- Finest
RULE 3
For
adjectives ending with ‘y’, ‘y’ is removed and ‘ier’ is added for comparative
form and ‘iest’ for the superlative form.
Lazy –
Lazier – Laziest
Crazy –
Crazier – Craziest
Wealthy –
Wealthier – Wealthiest
Heavy –
Heavier - Heaviest.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் தமிழ்*
பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
*ராஜகோபாலச்சாரி*
2.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
*எறும்பு*
3. உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
*இந்தியா*
4. தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
*பைன்*
5. உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
*மார்ச் 22*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*உதவியின் சிறப்பு*
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
அடிமை கொஞ்சமும் பயப்படாமல் அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்துஇ அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.
முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும் நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.
இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன் அந்த அடிமையை விடுதலை செய்து சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி
:
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி- பிரதமர் வாழ்த்து.
🔮அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர்: செங்கோட்டையன்.
🔮சந்திரயான்-2’ஐ
தொடர்ந்து சூரியனின் கரோனா பகுதியை பற்றி ஆய்வு செய்ய வருகிற 2020ல் விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
🔮உத்திரபிரதேச மாநிலத்தில்
பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
🔮தொழில்நுட்பக் கோளாறால் தொடர்ந்து 3வது நாளாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
🔮இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான்' : நடுவர் தர்மசேனா ஒப்புதல்.
🔮துணை ராணுவ படையில் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
🔮Chandrayaan-2 goes up successfully,
places satellite in orbit
🔮After Chandrayaan-2, ISRO plans
mission for the Sun in 2020.
✳✳✳✳✳✳✳✳
*தொகுப்பு*
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments
Post a Comment