Header Ads

Header ADS

School Morning Prayer Activities - 17.07.2019



*தொகுப்பு*

T.தென்னரசு,

TN டிஜிட்டல் டீம்,

திருவள்ளூர் மாவட்டம்.

செய்திச் சுருக்கம்
🔮தமிழக எம்.பி.க்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
🔮அசாமில் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து விலங்குகளை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் மும்முரம்.
🔮 ஆந்திர மாநில கவர்னராக ஹரிசந்திரனும்சத்தீஸ்கர் கவர்னராக உய்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
🔮கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கிமலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
🔮உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்  விஜயபாஸ்கர் அழைப்பு.
♻♻♻♻♻♻♻♻



திருக்குறள்* 17-07-2019

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
 சிலசொல்லல் தேற்றா தவர்.


*மு. உரை*:

குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

*கருணாநிதி  உரை*:

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

*சாலமன் பாப்பையா உரை*:

குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*


குறிப்பாக மாணவர்கள் அறிவியலில் நம்பிக்கை வைத்து எந்த காரியத்தையும் துருவித் துருவிப் பார்க்க வேண்டும். முன்னோர்களை திரும்பி பார்க்கவே கூடாது.
   - தந்தை பெரியார்


♻♻♻♻♻♻♻♻

*பழமொழி*


Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important  Used Words*

 Ping Ling  பன்றிக் குட்டி


 Porcupine  முள்ளம்பன்றி


 Pony  மட்டக்குதிரை


 Porpoise  கடற்பன்றி, திமிங்கலம்


 Puppy  நாய் குட்டி


✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*


1.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?

                            *ஹோவாங்கோ ஆறு*


2. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

                                            *ஹர்ஷர்*


3. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

                                      *சமுத்திர குப்தர்*


4. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

                                       *ரஸியா பேகம்*


5. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?

                                 *இந்தோனேசியா*


🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Adverbs*

Usage

Common adverbs of certainty:

*certainly , definitely, probably, undoubtedly, surely*


1. Adverbs of certainty go before the main verb but after the verb 'to be':

He definitely left the house this morning.
He is probably in the park.

2. With other auxiliary verb, these adverbs go between the auxiliary and the main verb:

He has certainly forgotten the meeting.
He will probably remember tomorrow.

3. Sometimes these adverbs can be placed at the beginning of the sentence:

Undoubtedly , Winston Churchill was a great politician.
BE CAREFUL! with surely. When it is placed at the beginning of the sentence, it means the speaker thinks something is true, but is looking for confirmation:

Surely you've got a bicycle?

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*


*பத்துப்பாட்டு*


திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*


*சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்*


 அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.


 கழுதைப் புலியோ நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.


 அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.


  பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.


 குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.


 மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.


*நீதி* :

நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.