School Morning Prayer Activities - 16.07.2019
*தொகுப்பு*
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
செய்திச் சுருக்கம்*
🔵பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.
🔵பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு.
🔵அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு - இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை 16 ஆனது.
🔵தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
🔵செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
🔵மாண்டனிக்ரோ நாட்டில் நடந்த, சர்வதேச, 'மெடி' ஒலிம்பிக் தடகள போட்டியில், சென்னை கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இன்றைய திருக்குறள்*
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
*மு.வ உரை*:
உற்ற
காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
*கருணாநிதி
உரை*:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
*சாலமன் பாப்பையா உரை*:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
_அப்துல் கலாம்.
♻♻♻♻♻♻♻♻
*பழமொழி*
A man of
courage never wants weapons
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
🌿☘🌿☘🌿☘🍀🌿
*உடல் நலம்*
*சூர்ய நமஸ்காரம்*
பலர்
மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை
செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Used Words*
Spinach
பசலைக்கீரை
Sapota சப்போட்டா
Sugar Cane
கரும்பு
Sun Flower
சூரியகாந்திப்பூ
Sweet Lime
சாத்துக்குடி
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?
ரிப்பன் பிரபு
2.இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
3.இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?
சுவாமிநாதன்
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's
grammar*
*Articles(a,an,the)
are not used:*
Before the
name of a person:
*Example:*
I am a fan
of Michael Jackson. (not A or The Michael Jackson)
Before the
name of a place, town, country, street, or road.
*Example:*
Barcelona is
a beautiful city. (not A or The Barcelona)
Before names
of materials.
*Example:*
Gold is
found in Australia. (not A or The gold)
Before
abstract nouns used in a general sense.
*Example:*
We love all
beauty. (not a beauty or the beauty)
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் தமிழ்*
*நவரத்தினங்கள்*
மரகதம்,
மாணிக்கம்,
முத்து,
வைரம்,
வைடூரியம், கோமேதகம்,
நீலம்,
பவளம்,
புட்பராகம்.
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*கழுகின் நன்றியுணர்ச்சியும்*நரியும்*
ஒரு
நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர் கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார்.
இறக்கைகள் நன்கு வளர்ந்தது பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.
இதைப் பார்த்த நரி உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம் நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால் மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது.
இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும் பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும் விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு.
*நீதி* :
உதவி
செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.
No comments
Post a Comment