Header Ads

Header ADS

School Morning Prayer Activities - 12.07.2019


Prepared by

Covai women ICT_போதிமரம்

Image result for morning prayer

இன்றைய செய்திகள்


12.07.2019

* 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும்சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

மத்திய நீர்வள ஆணைய தலைவரான .கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு!

இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலைதடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்இந்திய வீராங்கனை டூட்டீ சந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.


*2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

விளக்கம்:

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

பழமொழி

Too much of anything is good for nothing

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

இரண்டொழுக்க பண்புகள்

1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.

2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.

பொன்மொழி

வெற்றியை நோக்கிய என் தீர்மானம் திடமாக இருந்தால், தோல்விகள் என்னை முந்த முடியாது.

ஓஜி மண்டினோ

 பொது அறிவு

1. மிக்- 21 ரக போர் விமானங்களை ஓட்டிய முதல் இந்தியப் பெண் விமானி யார்?

அவனி சதுர்வேதி ( 2018)

2. விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?

கோபால்ட் (குறியீடுCo)

English words & meanings

* Zoom - to enlarge, பெரிது படுத்தல்

* Zero - arithmetic symbol denotes absence of quantity, சுழி, ஒன்றுமில்லாமை

ஆரோக்ய வாழ்வு

தினமும்  காலையில்  15  கறிவேப்பிலையை  மென்று சாப்பிட்டால்  முடியின் வளர்ச்சியை  அதிகரிப்பதாேடு, கருமையாகவும்  அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

Some important  abbreviations for students

ISRO -  Indian Space Research Organisation

NASA - Need Another Seven Astronauts

நீதிக்கதை

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.

மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.

அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.

அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.

அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது.

ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!

படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.

அத்துடனா?

பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்துவீல்வீல்என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.

இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றேஎன்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான். இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் டணாய்க்கன்_ கோட்டை  என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

பாரம்பரிய விளையாட்டு -

பச்சைக் குதிரை:

பெரும்பாலும் மாணவர்களால் விளையாடப்படும் விளையாட்டு இது.தன்னுடன் விளையாடும் நண்பர்களுள் ஒருவரை முழங்கால் தொட்டு குனிந்து நிற்கச் செய்தும், பின்பு நிமிர்ந்து நிற்கச் செய்தும் சிறிது தூரத்திலிருந்து ஓடி வந்து, தாண்டும் விளையாட்டு பச்சைக்குதிரை எனப்படும்.

விளையாட்டின் நன்மைகள்:

*மாணவர்களின் உடல் வலுப் பெறுகிறது.

*உயரம் தாண்டும் திறன் அதிகரிக்கிறது.

* தூரத்திலிருந்து வரும்போதே உயரத்தை கணித்து காற்றில்  தாவும் திறன் வளர்கிறது.

*துணிவு அதிகரிக்கிறது.

* கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன.


Today's Headlines

🌸Tamil Nadu government imposes ban on 14 types of plastics was  to be followed:Chennai High Court

 🌸A.K Sinha, Chairman of Central Water Resources Commission, has been also appointed as Chairman of Cauvery Management Commission.

 🌸 Teacher's transfer counselling which is to held in Tamil Nadu tomorrow was postponed

 🌸A further wall was discovered during the 5th set of excavation in kizhadi

 🌸 In the World athletics championship for  University held in Italy,  Indian athlete Duttie Chand won the gold medal in the women's 100-meter running.

 🌸 World Cup Cricket:



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.