அரசு பள்ளிக்கு 'விசிட்' விரைவில் சிறப்பு குழு
திருப்பூர்:அரசு பள்ளிகளில் சேருவோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டும், மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.சில ஆசிரியர்களின் நடவடிக்கை இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் ஆசிரியர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காணவே, நடப்பாண்டில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், ஆசிரியர்களை கண்காணிக்கவும், அவர்களின் கற்பித்தல் திறனை சோதிக்கவும் வட்டார அளவில் சிறப்பு குழு விரைவில் அமைக்கப்பட உள்ளன. இக்குழுவினர், பள்ளிகள்தோறும் 'விசிட்' அடித்து, பள்ளி பதிவேடுகள், ஆசிரியர், மாணவர் வருகை, கற்பித்தல் முறைகள் அனைத்தும் ஆய்வு செய்ய உள்ளன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா கூறுகையில், ''தற்போது தனிப்பட்ட முறையில் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறேன்.வட்டார கல்வி அலுவலர்கள் கொண்ட குழு விரைவில் உருவாக்கப்படும்
இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments
Post a Comment