Header Ads

Header ADS

5% அகவிலைப் படி உயர்கிறது!




அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.
தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.

அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும்.
மத்திய அரசு அரசாணை வெளியிட்ட பின், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.