Header Ads

Header ADS

பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்!



''தமிழகத்தில், 2,400 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.வேலுார், சத்துவாச்சாரியில், அவர் அளித்த பேட்டி:
 
தமிழகத்தில், 1,248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, தவறு. ஒரு மாணவர் கூட இல்லாத, 45 பள்ளிகளை, தற்காலிக நுாலகமாக மாற்றவும், அந்த பள்ளி ஆசிரியர்களை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதும், அந்த பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை மூலம், மாணவ - மாணவியருக்கு காலணி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதற்கு பதிலாக, 70 லட்சம் பேருக்கு, சாக்ஸ் மற்றும் ஷூ வழங்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.நடப்பாண்டில், 1 லட்சத்து, 68 ஆயிரத்து, 414 மாணவ - மாணவியர், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டை விட, சேர்க்கை சதவீதம் கூடுதலாகி உள்ளது. தற்போது, 2,400 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

நீண்ட காலமாக, ஆசிரியர்கள், கரும்பலகையில், சாக்பீஸால் எழுதி பாடம் நடத்துகின்றனர். விரைவில் இந்த முறை மாற்றப்பட்டு, ஒயிட் போர்டில், ஸ்கெட்ச் பேனாவால் எழுதும் முறை கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.