மத்திய பட்ஜெட் 2019 - 2020 | முக்கிய அறிவிப்புகள்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 5, 2019

மத்திய பட்ஜெட் 2019 - 2020 | முக்கிய அறிவிப்புகள்!



2019-2010ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

மத்தியில் மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல்பட்ஜெட்

2019- 2020-ம் பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...
 
Live Update ...

01:12 Jul 5
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

01:02 Jul 5
தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12% ஆக உயர்வு.

01:01 Jul 5
பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு

01:01 Jul 5
ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ் )

குறைந்த விலையில் வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.
15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும்.

பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.

நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது, 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும். நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன என்று தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்

நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும்.
நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன.

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
 
எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு

அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்

ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்

அறிவியல் ஆராய்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்

உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும்

உலகின் சிறந்த 200 தொழில்நுட்ப கல்வி நிலைய்களில் இந்தியாவின் 2 ..டி.க்கள், ..எஸ்.சி. இடம் பெற்றுள்ளது

முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்

பசுமை தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

செளபாக்கியா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி செய்யப்படும்

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு

2014-ல் ஆட்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது

இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன

2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்

ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படும்

மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்

2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஒக்கீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 2% வட்டி மானியம் தரப்படும்

ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்

ரயில்வே துறையின் முதலீட்டு திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி தேவை

ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளப்படும்

தேசிய அளவிலான மின் தொகுப்பை போல எரிவாயு தொகுப்பு, தண்ணீர் தொகுப்பு உருவாக்கப்படும்

சமூகநல திட்டங்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்படும்

காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

ஒரு பிராண்டு பொருள் விற்பனை நிறுவனங்களுக்கான விதிமுறை தளர்த்தப்படும்

2022-ம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது

மீன்வள மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்

நாட்டின் 97% கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. நீளச் சாலைகள் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

1.35 லட்சம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.80,250 கோடி செலவிடப்படும்

கிராம தொழில்களை மேற்கொள்ள 75,000 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி தரப்படும்

மூங்கில், தேனீ வளர்ப்பு, காதித் தொழில்கள் மேம்பாட்டுக்காக 100 மையங்கள் உருவாக்கப்படும்

10,000 விவசாய உற்பத்தியாளர் மையங்கள் உருவாக்கப்படும்

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை

மத்திய - மாநில குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 9.6 கோடி கழிப்பறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்

ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டமும் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படும்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 ட்ரில்லியனாக அதிகரிப்பு

நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 ட்ரில்லியன் டாலராக இருக்கும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலரை எட்டும்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை புதிய இந்தியாவிற்கு வித்திட்டது.

ஒவ்வொரு துறையையும் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை -நிர்மலா சீதாராமன்

வாங்கும் திறன் அடிப்படையில் 3 வது பொருளாதார வல்லரசாக இந்தியா விளங்குகிறது.

அனைவருக்கும் வீடு கழிவறையை உறுதி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொழில் மண்டல வழிப்பாதைகள் அவசியம்

செயல்பாடு, சீர்திருத்தம், முன்னேற்றம் என்ற கொள்கையின்  அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது - நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர்

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்ளுக்கு மானியம் வழங்கப்படும்!

 வங்கி முறைகேடுகள் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மறைமுக வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம்

கங்கை நதியில் சரக்குப் போக்குவரத்தை 4 மடங்காக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

ரயில்வே துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 2018 முதல் 2030 வரை ரூபாய் 50 ட்ரில்லியன் முதலீடு தேவை

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூபாய் 20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது.

மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம் ஒரே மின்தொகுப்பு திட்டம்

 ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்.

உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்.

  வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்காக சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்படும்

  பாரத்மாலா, சாகர்மாலா திட்டங்கள் மூலம் போக்குவரத்துதுறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

No comments: