Header Ads

Header ADS

Flash News - ஜூலை 2-ம் தேதி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை



தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30 வரை அவை நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

* மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்

> அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு

* சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் - தனபால்

* ஜூன் 28-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

> 29, 30 அரசு விடுமுறை - சபாநாயகர்

* ஜூலை 1-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை - சபாநாயகர்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.