#BREAKING | தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி கட்டாயம் அல்ல - வரைவு அறிக்கையில் திருத்தம்
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
இந்தற்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது வரைவு அறிக்கை மட்டுமே என்று மத்திய அரசு கூறினாலும், தொடர்ந்து எதிர்ப்பு எழுந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதில், இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக இருக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தி மொழிப்பாடம் கட்டாயமில்லை.
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்தது மத்திய அரசு.
No comments
Post a Comment