Header Ads

Header ADS

பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு சிறுவன்!! வெளியான நெகிழ்ச்சி காரணம்!!





ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா-அப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களுடைய மகன் முகமது யாசின் அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த வருகிறார்.

இவர் கடந்தாண்டு சாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பத்திரமாக எடுத்துச் சென்று தனது பள்ளியின் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.
 
இவரது செயலை கண்டு வியந்த ஆசிரியர்கள், அவரை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்ட காவலதுறை எஸ்.பி., சக்திகணேசனை சந்தித்து, சிறுவனின் கையாலையே பணத்தை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சிறுவன் முகமது யாசினைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.