அரசு பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன்
விழுப்புரம்: லண்டனில் படித்த சிறுவன், விழுப்புரம் அடுத்த, நன்னாடு அரசு துவக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தை பூர்வீகமாகக் கொண்டவர், சிவபிரகாஷ். லண்டனில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி சுபாஷினி. அங்குள்ள பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மேற்படிப்புக்காக, சுபாஷினி, இந்தியா வந்துள்ளார். இவரது மூத்த மகன், விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இளைய மகனை சேர்க்க, விழுப்புரத்தில் உள்ள பல பள்ளிகளுக்கும் சென்று பார்த்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும், ஒரு வகுப்பறைக்கு, 45 மாணவர்களுக்கு மேல் உள்ளதால், குறைவான மாணவர்கள் படிக்கும் பபள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதன்படி, விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில்உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சிறந்த முறையில் தமிழ் கற்பிக்கப்படுவதாக அறிந்தார். இதையடுத்து, தன் இளைய மகன் அன்புச்செல்வனை, இப்பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
அன்புச்செல்வன் கூறுகையில், ''லண்டன் பள்ளியை விட, அதிக வித்தியாசம் உள்ளது. இங்கு வெயில் கடுமையாக உள்ளது,'' என்றார்.
No comments
Post a Comment