அதிக மாணவர்கள் இருந்தால் வகுப்புகளை பிரிக்க உத்தரவு
சென்னை:பள்ளிகளில், 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால், இரண்டு வகுப்பாக பிரித்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மத்திய - மாநில அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, விதிகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர், பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், ஆறு முதல், பிளஸ் 2 வரை, 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற வகையிலும், பாட வாரியாக, ஒவ்வொரு பாடத்துக்கும், தனித்தனி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு வகுப்பில், 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால், அந்த வகுப்பை இரண்டாக பிரித்து கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.'மாணவர்களை இரண்டு வகுப்பாக பிரிக்கும் போது, ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும், தனித்தனியே பாடம் நடத்தும் வகையில், பாட வேளைகளை நிர்ணயிக்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments
Post a Comment