இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு நிலவரம்
2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் கூட வழங்காமல் பத்தாண்டுகளாக வழங்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்-2017 அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில்-2017வழக்கு தொடுக்கப்பட்டது அது தற்போது இறுதிக்கட்ட விசாரணை நிலையில் உள்ளது கடந்த ஏப்ரல் மாத விசாரணையின் பொழுது வழக்கில் மனுதாரர் எதிர்மனுதாரர் ஆகியோர்களின் ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன அடுத்ததாக இறுதி விசாரணையை மட்டுமே என்று எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு மீண்டும் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீதியரசர்கள் மாறிவிடுவதால் தற்போது வழக்கு நீதியரசர் திரு. பார்த்திபன் அவர்களிடம் அடுத்த ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது... அடுத்த வாரத்தில் இறுதி விசாரணை தேதி தற்போது இருக்கும் நீதியரசர் குறிப்பிடுவார் அதன் பின்பு நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.*
தகவல் பகிர்வு
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*
No comments
Post a Comment