பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். நாளை மறுநாள்
முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு
பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை கடந்தாண்டை விட 2 லட்சமாக அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்ததற்கு வேலைவாய்பின்மையே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Post a Comment