Header Ads

Header ADS

எல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர்


Related image



 ''அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாற்று பாலின மாணவர்கள் மீதான தொல்லைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான, 'யுனெஸ்கோ' தயாரித்துள்ளது.'நண்பனாக இரு; துன்புறுத்துபவனாக இருக்காதே' என்ற பெயரிலான, இந்த புத்தகம், சென்னையில், நேற்று வெளியிடப்பட்டது.புத்தகத்தை வெளியிட்டு, செங்கோட்டையன் பேசியதாவது:மாற்று பாலின மாணவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
 
இது குறித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஒரு மாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, 'சகோதரன்' என்ற, தனியார் தொண்டு நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.விரைவில், அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., என்ற, மழலையர் வகுப்புகள் துவங்கப்படும். முதலில், தொடக்க பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதும், எல்.கே.ஜி.,க்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். எனவே, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம்.


பிளஸ் 1ல், பொது தேர்வு அறிமுகம் ஆனதால், மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.புத்தகத்தை, செங்கோட்டையன் வெளியிட, யுனெஸ்கோ புதுடில்லி அலுவலக இயக்குனர், எரிக் பால்ட் பெற்றார்.பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வி இயக்க திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், இயக்குனர் உஷாராணி, இணை இயக்குனர்கள் நாகராஜமுருகன், வாசு, பாலமுருகன் பங்கேற்றனர்.'மொபைல் போனில்இனி பாடம் படிக்கலாம்!'அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:தமிழகத்தில், எல்.கே.ஜி., மாணவர்களுக்கு, மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், நிதி உதவி தரப்படுவது இல்லை.

எனவே, அச்சட்டத்தின் பல அம்சங்களை, மறுபரிசீலனை செய்யுமாறு, கோரிக்கை விடுக்க உள்ளோம்.பள்ளிகளில், தினமும் யோகா மற்றும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக, கல்வியறிவை மேம்படுத்தும் வகையில், ' - லேர்னிங்' முறையில், மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.