புத்தகமே வழங்காமல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும்முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு கடந்த ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இந்த ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டன.
புத்தகங்கள் போதிய அளவில் அச்சிடாததால் மாணவர்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர்கூறியதாவது:கடந்த ஆண்டுகளில் பாடப்புத்தகங்கள் மூன்று கட்டங்களாக மாற்றப் பட்டன. தற்போது இரண்டு கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கேற்ப புத்தகங்கள் அச்சிடப்படவில்லை.தொடக்கநிலையில் 1, 2 ம் வகுப்புக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 3, 4, 5 வகுப்புகளுக்கு வழங்கவில்லை. 7, 9, 10ம் வகுப்புக்குரிய சமூக அறிவியல், 9ம் வகுப்பு ஆங்கில பிரிவுக்கானபுத்தகங்கள் வரவில்லை.
பிளஸ் 2 கலைப்பாடத்தை தவிர மற்ற பிரிவுகளில் முதன்மை பாடங்களுக்கு புத்தகங்கள் வரவில்லை. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும், நகல் எடுக்கவும் கிராமங்களில் வசதியில்லை, என்றார். பாடப் புத்தகங்கள் இல்லாத நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக அமைப்பு செயலாளர் சற்குணராஜ் கூறுகையில், ''புத்தகங்களை வழங்காத நிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.பாடங்கள் குறித்தேதெரியாத நிலையில் பயிற்சி அளித்து எந்தபயனும் இல்லை.புத்தகங்கள் வழங்கிய பின் பயிற்சி அளிக்கவேண்டும்'' என்றார்.
No comments
Post a Comment