தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு!
கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 83
பணி
மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:
நகல் படிப்பவர், நகல் பரிசோதகர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி:
முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி:
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி:
துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி:
மசால்ச்சி
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019
No comments
Post a Comment