தமிழக பள்ளி கல்வியில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, நாளை, 'ஸ்மார்ட்' அட்டை
தமிழக பள்ளி கல்வியில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, நாளை, 'ஸ்மார்ட்' அட்டைகள் வழங்கப்பட உள்ளன.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என, 2011ல் அறிவிக்கப்பட்டது.
இந்த
அறிவிப்பு வெளியாகி, எட்டு ஆண்டுகள் ஆன நிலையில்,இந்த ஆண்டு, ஸ்மார்ட் அட்டை திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்கும் விழாவில், நாளை, 70 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதில், ஒவ்வொரு மாணவருக்கும், தனி அடையாள எண் தரப்படுகிறது.
மாணவர்களின் பெயர், பெற்றோர் விபரம், முகவரி, வகுப்பு, அவர்கள் படிக்கும் பள்ளிகளின் விபரம்,ஆதார் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில், 'க்யூ ஆர்' குறியீடு மற்றும் மின்னணு, 'சிப்' இணைக்கப்பட்டு,விபரங்களை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments
Post a Comment