'ஸ்மார்ட்போன்ல இப்படி ஒரு கேமராவ பார்க்கவே முடியாது!' சவால்விடும் அஸுஸ் 6Z
இந்தப் போனில் அஸுஸ் நிறுவனம் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு முக்கியமான அம்சம் கேமரா. இதுவரை எந்தப் போனிலும் பார்த்திராத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
'ஸ்மார்ட்போன்ல இப்படி ஒரு கேமராவ பார்க்கவே முடியாது!' சவால்விடும் அஸுஸ் 6Z
இந்த
மாதத்தின் தொடக்கத்தில்தான் அஸுஸ் நிறுவனம் இந்தியாவில் பெரும் பின்னடைவைச் சந்திந்திருத்தது. கடந்த பல வருடங்களாக ஜென்போன் (Zenfone) என்ற பெயரை வைத்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது அஸுஸ் நிறுவனம். பெயர் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அந்தப் பெயரை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். அந்தத் தீர்ப்புக்குப் பின்னர் முதல் ஃபிளாக்ஷிப் மொபைலை வெளியிட்டிருக்கிறது அஸுஸ். கடந்த மாதம் ஸ்பெயினில் Asus Zenfone 6 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்தியாவில் அந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது என்பதால் Asus 6Z என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அஸுக்கு கைகொடுக்குமா ஃபிளிப் கேமரா
அஸுஸ்
இந்தப் போனில் அஸுஸ் நிறுவனம் குறிப்பிட்டுக் காட்டும் ஓர் அம்சம் கேமரா. இதுவரை எந்தப் போனிலும் பார்த்திராத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஃபுல் டிஸ்ப்ளே டிரெண்டிங்கில் இருக்கும் இந்தக் காலத்தில் ஃபிரன்ட் கேமராவை முன்பக்கத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம் மாற்றியிருக்கிறார்கள். இப்போது பெரும்பாலான மொபைல்களில் பாப் அப் கேமராவைப் பார்க்க முடிகிறது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில்கூட பாப் அப் கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 6Z ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு ஒரு புதிய வழியைக் கொடுத்திருக்கிறது. 48 MP மற்றும் 13 MP என இரண்டு கேமராக்கள் இதில் இருக்கின்றன. இந்த கேமரா மற்ற போன்களில் இல்லாத வகையில் மேலும் கீழுமாகத் திரும்பும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஒரே கேமராவை ஃபிரன்ட், பேக் என இரண்டு இடங்களிலும் பயன்படுத்த முடிகிறது. உள்ளே இருக்கும் ஒரு ஸ்டெப்பர் மோட்டார் இதை மேலும் கீழுமாக நகர்த்த உதவுகிறது. மேலும், இந்த ஃப்ளிப் கேமரா மூலமாகப் பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோவை எடுக்க முடியும். எடுத்துக்காட்டாக இந்த போனில் முதல்முறையாக ஆட்டோ பனோரமா என்ற வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, பனோரமா மோடில் புகைப்படம் எடுக்கும்போது மொபைலை மொத்தமாகத் திருப்ப வேண்டியிருக்கும். ஆனால், இதில் ஃப்ளிப் கேமரா இருப்பதால் அதுவாகவே நகர்ந்து பனோரமா போட்டோக்களை எடுக்கும். பெரும்பாலான ஃபிளாக்ஷிப் போல இல்லாமல் இதில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரிகார்டை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது பெரும்பாலான ஃபிளாக்ஷிப் மொபைல்களில் AMOLED டிஸ்ப்ளேவே கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் இருப்பது 6.4 இன்ச் IPS டிஸ்ப்ளேதான். கொரில்லா கிளாஸ் 6 முன்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இருப்பதும் கண்ணாடிதான்.
Snapdragon 855 புராஸசர் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Snapdragon
855
அஸுஸ் போன்களில் நீண்ட காலமாக மாற்றமடையாத ஒரு விஷயம் பேட்டரி. ஒரு போனுக்கு பேட்டரியின் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை ஷியோமியே அஸுஸைப் பார்த்துதான் கற்றுக்கொண்டது. அஸுஸில் 5000 mAh பேட்டரியைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகமாகவே பார்க்க முடியும். இதிலும் அதே திறன் கொண்ட பேட்டரியைக் கொடுத்திருக்கிறது அஸுஸ். பெரும்பாலும் பேட்டரியின் அளவைக் குறைக்கவே பல மொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்வார்கள். காரணம் அதனால் மொபைலின் தடிமனையும், எடையையும் வெகுவாகக் குறைக்க முடியும். ஆனால், 6Z-ல் இருப்பது 5000
mAh பேட்டரி அதனால் ஒன் ப்ளஸ் 7-னுடன் ஒப்பிடுகையில் போனின் எடையும் அளவும் சற்று அதிகமாகவே இருக்கிறது. 18W சார்ஜர் உடன் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக வேகமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். தேவைப்பட்டால் இந்தப் போனை பவர் பேங்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்காக இதில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அஸுஸ்
6GB RAM/
64GB வேரியன்ட் ரூ.31,999. 6GB RAM/ 128GB வேரியன்ட் ரூ.34,999. மற்றும் 8GB RAM/ 256GB ரூ.39,999 என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் Asus 6Z விற்பனைக்கு வருகிறது. அண்மையில் வெளியான ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ
ஸ்மார்ட்போன்களுடன் போட்டிபோடும் வகையில்தான் அஸுஸ் 6Z-ன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேமரா, பேட்டரி தவிர்த்து ஒன்ப்ளஸுடன் போட்டிபோடும் வகையில் வேறு எதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கிடையாது. டிஸ்ப்ளே, பில்டு குவாலிட்டி எனப் பல வகைகளில் ஒன்ப்ளஸ் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் விலை குறைவாக இருந்திருந்தால் Asus 6Z கவனம் ஈர்த்திருக்கும்.
No comments
Post a Comment