Header Ads

Header ADS

நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு மாதத்தில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்



ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' முறை, ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 11 பள்ளிகளைச் சேர்ந்த, பிளஸ் 2 பயிலும் மாணவ - மாணவியர், 2,006 பேருக்கு, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று முன்தினம், 'லேப்டாப்' வழங்கி பேசியதாவது:தமிழகத்தில், இந்தாண்டு, 15.40 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, செப்., மாத இறுதிக்குள், 7,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் நிறைவேற்றப்படும்.'நீட்' தேர்வு குறித்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துஉள்ளோம்.எங்களது கொள்கையே, நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்பது தான். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, இம்மாத இறுதிக்குள் சீருடைகள் வழங்கப்படும்.
 
தமிழகத்தில், 7,800 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். அரசு பள்ளிகளில், தற்போது, இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. போக்குவரத்து துறை வழங்கிய, பழைய பஸ் பாசையே, செப்., மாதம் வரை, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஸ் பாஸ் மற்றும் ஸ்மார்ட் கார்டு இணைப்பு குறித்து, முதல்வரிடம்பேசி, முடிவு செய்யப்படும்.ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, பயோ மெட்ரிக் முறை, ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும். புதிதாக துவங்கும் கல்வித் துறை சேனலுக்கு, சோதனை ஓட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.