பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.06.19
இன்றைய செய்திகள்
04.06.2019
*பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். http://www.eaonline.in என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
* மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பன்னோக்கு மையம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் மட்டுமின்றி மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய அணைகளில் 11% மட்டுமே நீர்இருப்பு உள்ளது.
* கஜகஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தடகளப் போட்டியில் குன்னூரைச் சேர்ந்த தடகள வீரர் ஸ்ரீகிரண் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
* உலகக்கோப்பை கிரிக்கெட்
நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்."
பழமொழி
Blessings
are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. இந்த புதிய வருடம் எனக்கு கடவுளால் கொடுக்க பட்ட கொடை.
2. எனவே எனது ஒழுக்கம், படிப்பு, பண்பாடு, கீழ்படிதல், இயற்கை வளங்கள் பேணுதல் மற்றும் எனது திறமைகள் மூலம் நான் பயிலும் பள்ளிக்கும் எனது நாட்டிற்கும் பெருமை தேடித் தருவேன்.
பொன்மொழி
குழந்தைகளின் பண்புகளை செம்மையாக உருவாக்கும் சமூகமே ,நாட்டின் வரலாற்றையும் உலக வரலாற்றையும் உருவாக்குகிறது.
___ மெக்கான்கோ.
பொது அறிவு
1. நோபல் பரிசு, பாரத ரத்னா ஆகிய இரு விருதுகளைப் பெற்ற ஒரே பெண்மணி யார்?
அன்னை தெரசா
2.வண்ணத்துப்பூச்சிகளின் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது ?
மேகாலயா
English
words and meanings
Ape- a
piramate (monkey) without tail, மனித குரங்கு
Abroad
- to a foreign country, வெளி நாடு
ஆரோக்ய வாழ்வு
தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து
பருகினால்
குடல் புண் மற்றும் வாய்ப்புண் முற்றிலும் குணமடையும்.
Some
important abbreviations for students
CCE -
Continuous and comprehensive Evaluation
QR code -
Quick response code
நீதிக்கதை
ஒரு
அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.
“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.
அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.
அவர்
நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.
“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.
அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.
அவர்
இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி:
அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
No comments
Post a Comment