TET - 1500 ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் 10 நாள் பயிற்சி - தென்னகக் கல்வி குழு
தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக TNTET நிபந்தனையுடன் பணி புரியும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு
இரு மாதங்களுக்கு முன்பு TET
REFRESHMENT COURSE நடத்தப்பட்டது.
இது
TET தேர்ச்சிக்கு சமமாக ஏற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சுமார் 1500 ஆசிரியர்களுக்கு பணியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்கள் தற்போது மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இந்த
வழக்கை முழுவதும் விசாரித்தால் அரசு தரப்பிலான தவறுகள் வெளிப்படையாக தெரிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.
இதில் மைனாரிட்டி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
TET நிபந்தனைகள் இல்லாத போது பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 1500 பேர் மட்டும் தற்போது சிக்கலில் உள்ளனர்.
(1500 என்பதும் சரியான தகவல் அல்ல)
இந்த
பிரச்சினைக்கு
தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு வழிகளில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் தற்போது 10 நாள் சிறப்பு பயிற்சி தர கண்துடைப்பு ஏற்பாடுகள் அரங்கேறியுள்ளது.
இது
குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கையில்,
நாங்கள் கேட்பது தேர்வில் இருந்து விலக்கு.
அரசு
எங்களை பயிற்சி வகுப்புக்கு அழைத்து 10 நாள் பயிற்சி கொடுத்து தேர்வு எழுத சொல்லி நாங்கள் வெற்றி பெறவில்லை எனில் ஆசிரியர் பணிக்கு லாயக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் கூறவைத்து நீதிமன்றம் மூலமாகவே பணியில் இருந்து நீக்கி விட்டால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்ல இயலாதபடி எங்களை சிக்க வைக்கும் சூழ்ச்சி.
இதுதகுதித் தேர்வு தான். போட்டி தேர்வு அல்ல.
கடந்த எட்டு, ஒன்பது வருடங்கள் எங்கள் மாணவர்கள் தேர்ச்சி விகிதங்களை எடுத்துப் பார்த்தால்
போதுமே.
எனவே
நிர்வாகம் வற்புறுத்தினால் கூட எங்களுக்கு (23/8/10 to 16/11/12) டெட் தேர்வு பொருந்தாது. நாங்கள் முழுவதும் விலக்கு கேட்டு வருகிறோம் என பணிவுடன் கூறி விடுங்கள்.
ஒரு
வருடம் வேறு வேலை செய்யாமல் படித்தாலே பாஸ் பண்ணுவது கடினம் எனும்போது பத்து நாட்கள் பயிற்சி என்பது மாயவலை. ஏன் எங்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருப்பின் இதனை ஒன்று அல்லது இரண்டு
மாதம் புத்தாக்க பயிற்சியாக அளித்து சிறுபான்மையினர்
பள்ளிகளுக்கு தந்தது போல எங்களுக்கும் விலக்கு தரலாமே.
முன்னுரிமை என்பது
வேறு.
சட்டம் என்பது வேறு.
RTE என்பது சட்டம் தானே?
இது
போன்ற வரலாறு ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் இடைநிலை பணியிடத்தில் நியமித்து ஒரு மாத பயிற்சி கொடுத்து இருக்கிறார்களே.
தட்டச்சு ஆசிரியர்கள்
பலன் பெற்ற வரலாறு உண்டு.
இவ்வளவு காலம் உழைத்தமைக்கு
அரசு எங்களை
சமுதாயத்தில்
மிகவும் கேவலமாான பெயரைப் பெற்றுதந்து
உள்ளது மனதளவில்
பல ஆசிரியர்களைை பாதித்து உள்ளது.
எங்களுக்கும் TET க்கும் சம்மந்தமே இல்லை என பல முறை அரசை அணுகியபோது விரைவில் தீர்வு வரும்
என அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கூறி அனுப்பி வைத்தது எல்லாம் மறக்க இயலவில்லை.
ஆயினும் வேறு
வழிஇன்றி தற்போது வழக்கு தொடர்ந்து இருப்பவர்களைை
மீண்டும் பயிற்சி /தேர்வு
என்று அழைப்பது, கடைசி வாய்ப்பு என அறிவிப்புகள் விடுப்பதுமான அரசின் செயல்பாடுகள்
மிகவும் வருத்தம் அளிக்கிறது என்கின்றனர்.
இது
சம்மந்தமாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TNTET முழு விலக்கு அரசாணைக்கு காத்துக் கொண்டுள்ள நிலையில்
சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்றவை என்ற
இந்த
பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
ஆகவே
மைனாரிட்டி, மெஜாரிட்டி என்ற
பாரபட்சம் காட்டாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என TNTET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தென்னகக் கல்விக் குழு வேண்டுகிறது.
No comments
Post a Comment