Header Ads

Header ADS

Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி! பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை பள்ளிக்கல்வியில் இருந்து தமிழை அகற்றும் முயற்சி என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்






*Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!*


 12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு முதல் அதனை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு தேர்வுகள் 600 மதிப்பெண்களில் நடந்தது.

இந்நிலையில், தற்போது 600 மதிப்பெண்ணை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்தால் போதும்.

10-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 1 மற்றும் 2-ம் தாள் நீக்கப்பட்டு, ஒரே பாடமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை பள்ளிக்கல்வியில் இருந்து தமிழை அகற்றும் முயற்சி என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.