வருவாய்த்துறை சான்றிதழ் மட்டுமே போதுமானது; பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
மாணவர்களின் பள்ளி மாற்றுச் சான்றித ழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருவாய்த்துறை அளிக்கும் சாதி சான் றிதழை ஏற்கவும் என்று மட்டும் குறிப் பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்குகின்றன.
இவை
தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி யார் சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டு வரு கின்றன.பள்ளிகளில் படிக்கும் மாணவர் கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும்போது அவர்களுக்கு ‘டிசி’ எனப் படும் மாற்றுச்சான்றிதழ் (Transfer Certifi cate)வழங்கப்படும். அந்தச் சான்றிதழில் மாணவரின்பெயர், சாதி, மதம், தேர்ச்சி நிலை, நன்னடத்தை சான்று, முக்கியமான அங்க அடையாளங்கள் முதலிய விவரங் கள் இடம் பெற்றிருக்கும். மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லும்போது மதிப் பெண் சான்றிதழுடன் மாற்றுச் சான்றிதழை யும் சேர விரும்பும் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப் படையில் கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆரம்ப காலத்தில் மாற்றுச் சான் றிதழில் சாதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. அதன்பின் சாதியின் பெயரை குறிப்பிடுவது மாணவர்கள், பெற்றோரின் விருப்பத்துக்கு விடப்பட்டது.
அதன்படி, அவர்கள் விரும்பாவிட்டால் மாற்றுச் சான்றிதழில் சாதி குறிப்பிட தேவை யில்லை என தமிழக அரசு அறிவித்தது.சாதி பெயர் குறிப்பிடுவது விருப்பத் துக்குவிடப்பட்டாலும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும்மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:2019-20-ம் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்கள் மூலம் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலமாக தனியாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் மாற்றுச் சான்றிதழில் மாணவரின் சாதியை குறிப் பிட வேண்டிய அவசியமில்லை. எனவே, மாற்றுச் சான்றிதழில் மாணவர் எந்த சாதியை சார்ந்தவர் என்று குறிப்பிட வேண் டாம். மாற்றுச் சான்றிதழில்சாதியின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில், ‘வருவாய்த்துறை வழங்கும் சாதி சான் றிதழை ஏற்கவும்’ என்று மட்டுமே குறிப் பிட வேண்டும்.அதேநேரம் சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை / சமயம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், மாணவரோ, பெற்றோரோ சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என தெரிவித்தால் அந்த இடத்தை அப்படியே காலியாகவிட்டு அவர்களுக்கு சான்றிதழை வழங்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கும் முறையாக தெரிவித்து உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி இணைய தளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment