Header Ads

Header ADS

மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு!! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்



இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு!! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 700 அரசு பள்ளிகளில் 30% சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது.இந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் மத்தியபிரதேச மாநிலத்தின் கல்வித்துறை மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்தநிலையில் இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன் குறைவு தான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளதுஇந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள 700 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3500 ஆசிரியர்களுக்கும் திறனாய்வு தேர்வு நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை போலவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு வரும் ஜூன் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் ஆசிரியர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்களது தகுதியை குறைக்கப்படும் என்றும், மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வேலையை விட்டு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.