மீண்டும் போராடுவோம் 'ஜாக்டோ ஜியோ'
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்; தவறினால், போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை,'' என, 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:சட்டசபையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற தொகுப்பூதியத்தில் பணிபுரிவோருக்கு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ ஜியோ' போராட்டத்தில் ஈடுபட்டது.தற்போது, இப்பிரச்னை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லுாரி ஆசிரியர்களை, அரசு பணிமாற்றம் செய்தது. அந்நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, நிர்வாகிகளை அழைத்து, முதல்வர், இ.பி.எஸ்., பேச வேண்டும். தவறினால், போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Post a Comment