Header Ads

Header ADS

விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு!

Image result for பேரணிகளில்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பங்குபெறுமாறு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் .கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மழலையர் வகுப்பு

வரும் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடிமையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடித்தாக வேண்டும். இதுதவிர அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது நிரம்பியவர்கள், பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் 5 வயது நிரம்பியுள்ள குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

பதாகைகள் மூலம் விளம்பரம்:
   
மாணவர் சேர்க்கை சார்ந்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், பலகைகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமக் கல்விக் குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்களை நடத்தி மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும். இதற்காக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கு பெற செய்யக்கூடாது.

இதுதொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுரைகளை வட்டாரக்கல்வி அதிகாரிகள் மூலம்அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.