Header Ads

Header ADS

மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்



திருவள்ளூர்மாவட்டம் *பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம்
பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை ஆசிரியாராக பணி புரிந்து வருகிறார்

மாற்றுத்திறனாளியான இவருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்காக சென்னை சென்றவர்
பயிற்சி வகுப்பைமுடித்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்
 திரும்புகையில்
திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் புச்சிரெட்டிப்பள்ளிக்கு சற்று முன்னதாக பெருகுமிக்கும் புச்சிரெட்டிப்பள்ளிக்கும் இடையில் உள்ள திருப்பத்தில் திருத்தணியை நோக்கி மிகவவேகமாக வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதிமிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது

அதில் இடைநிலை ஆசிரியர் தாமோதரத்திற்கு தலையில் மிகப்பெரிய பலமான அடி தலையில் பட்டதால் மண்டை உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
அங்கு முடியாததால் திருவள்ளூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்

ஒவ்வொரு தேர்தல் வகுப்பிற்கும் நிறைய ஆசிரியர்களுக்கு மரணம் ஏற்படுவது தொடர்கதையாகிறது

கண்டுக்கொள்ளுமா தேர்தல் ஆணையம்

தேர்தல் பணியாற்றுவோரை தேர்தல் ஆணையமே பேருந்து ஏற்பாடு செய்து அழைத்துச்சென்று மீண்டும் வீடுகளில் விட ஏற்பாடு செய்யவேண்டும்

அவர் ஆன்மா சாந்தியடைய அவரவர் வணங்கும் கடவுள்களை வேண்டிக்கொள்வோம்

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியிலும்
சொரக்காயப்பேட்டை கிராமத்தினர் மத்தியிலும் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது

தேர்தல் ஆணையம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கியது ஏன்

இவர் *2009 க்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்*

ஊதியக்குழுவால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் ஒருவர்

டெட் தேர்வெழுதி பணிக்கு வந்தவர்

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்

இவருக்கு சமீபத்தில்தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது

குழந்தையில்லை

இவர் உடன் பிறந்தவர் நான்கு சகோதரிகள்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.