தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, April 30, 2019

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்



சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சென்னையில் தனியார் பள்ளிகள் ஏராளமாக இயங்கி வந்தாலும் கூட, இந்த அரசு பள்ளியில் மட்டும் மாணவிகள் எண்ணிக்கை குறையவே இல்லை. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், இந்த பள்ளியில் கல்வித்தரம் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதால் இங்கு அட்மிஷன் பெற கடும் போட்டி நிலவுகிறது.
 
 கடந்த ஆண்டுகளில் பல முறை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள இப்பள்ளி சமீபத்தில் வெளியான பிளஸ்2மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமான தேர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேற்று  வழங்கப்பட்டதையொட்டி ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளியில் குவிந்தனர். சென்னை மட்டுமில்லாமல், விழுப்புரம், விருதுநகர், போன்ற பிற மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்களும் இங்கு விண்ணப்பம் பெறுவதற்காக வந்திருந்தனர். அப்போது விருதுநகரில் இருந்து இந்த பள்ளியில் பிள்ளையை சேர்ப்பதற்காகவே சென்னைக்கு குடிபெயர்ந்து வந்துள்ளதாக பெற்றோர் ஒருவர் நெகிழ்ச்சி உடன் தெரிவித்தார்

No comments: