45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது என்ற TET விதிமுறையை எதிர்த்து வழக்கு
45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது என்ற TET விதிமுறையை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரி தேவி வழக்கு தொடுத்து உள்ளார்...
படிக்கும் போது சொல்லப்படாத விதிமுறை வேலைக்காக முயற்சி செய்யும் போது விதிக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் கவலைக்கு உள்ளானார்கள்.
2012 லிருந்து நம் மாநிலத்தில் 4 முறை TET தேர்வு நடத்தும் போது இந்த விதிமுறை இல்லை. TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிச்சாங்க. அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதிய விதிமுறைவகுத்துள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால் B.Ed., படிக்க UG யில் SC/ST க்கு -40%, MBC/DNC-43% தகுதியில் B.Ed., படிக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது இம்முறையால் 40% முதல் 45% வரை UG யில் மதிப்பெண் பெற்றோர் தற்போது நடக்கும் TET தேர்வை எழுத முடியாத நிலையில் வழக்கு போட்டு இருக்காங்க.
வழக்கில் என்ன நடக்கும் என்று யோசிக்கிறிங்களா.... தேர்வு நடக்கும். விதிமுறையில் மாற்றம் வருமா என்பதை வழக்கு நடக்கும் போது நாம் சொல்ல கூடாது என்பது விதிமுறைங்க... வழக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருதாம்...
வழக்கு போட்டவங்களுக்கு வாழ்த்துகள்...
No comments
Post a Comment