அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்!
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் பாலாஜி வேலூரில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு மாநில அரசின் அனுமதி பெற்றுதான் கல்லூரி தொடங்க முடியும். ஆனால் தமிழகத்தில் சுமார் 2000 போலி நர்சிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சி எனக்கூறி மாணவ, மாணவிகளிடம் பல லட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர். இவற்றில் படித்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
No comments
Post a Comment