School Morning Prayer Activities - 07.03.2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
இன்றைய செய்தி துளிகள் :
1) 10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
2) அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
3) தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்றுக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
4) தமிழகத்தில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம்
5) ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி
திருக்குறள் : 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பழமொழி:
Make hay
while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
பொன்மொழி:
எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்
இரண்டொழுக்க பண்பாடு :
1) தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2) நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.
பொது
அறிவு :
1) முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
இத்தாலி
2) கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
இங்கிலாந்து
நீதிக்கதை :
ஒரு
வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
ஒரு
நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.
குரங்கிடம் அப்பத்தை கொடுத்து
அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.
அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது
கடித்து விட்டு மீண்டூம் போட்டது.
இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.
அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.
ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.
பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.
நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.
No comments
Post a Comment