School Morning Prayer Activities - 18.03.2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
உரை:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
பழமொழி:
Might is
right
வல்லன் வகுத்ததே சட்டம்
பொன்மொழி:
கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
இரண்டொழுக்க பண்பாடு :
1) எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2) காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொது
அறிவு :
1) கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா
2) தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?
டெலுரியம்
நீதிக்கதை :
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு
நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”
ராமு
சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”
ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
இன்றைய செய்தி துளிகள் :
1) அரசு பள்ளி மாணவி ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!
2) தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
3) ட்விட்டரில் காவலர் நரேந்திர மோடி என பெயரை மாற்றினார் பிரதமர் மோடி
4) செய்தி சேனல்களை சிறையில் ஒளிபரப்பக் கூடாது: சிறைத்துறை தலைவர் உத்தரவு
5) கோடைக்கால ஒலிம்பிக் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
No comments
Post a Comment