லோக்சபா தேர்தல்: கல்லூரி தேர்வுகள் முன்கூட்டியே முடியும்
லோக்சபா தேர்தல் காரணமாக, கல்லுாரி தேர்வுகளை ஏப்ரலுக்குள் முடிக்க, பல்கலைகள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில், பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. வழக்கமாக, ஏப்ரலில் தேர்வுகள் முடியும்.
ஆனால், இந்தாண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், மார்ச்சுக்குள் பொதுத் தேர்வுகள் முடிக்கப்படுகின்றன.இந்நிலையில், உயர்கல்வித் துறையிலும், தேர்வுகளைமுன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வழக்கமாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஒவ்வொரு கல்வியாண்டின் இரண்டாம் செமஸ்டர், ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கும்.இந்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் பணிகளில் பேராசிரியர்களும், உயர்கல்வித் துறை ஊழியர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது.எனவே, செமஸ்டர் தேர்வை, ஏப்ரல் இறுதியில் முடிக்க, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை, அண்ணா பல்கலை, பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார்பல்கலை உள்ளிட்டவற்றின் இணைப்பு கல்லுாரிகளுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கும் என, தெரிகிறது.அதிகபட்சம், மே முதல் வாரத்திற்குள், தேர்வுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment