வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா? - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, March 15, 2019

வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா? - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்


வருமான வரி நோட்டீஸ்

வருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி!

பக்க விளைவுகள் இல்லாமல் உங்கள் அழகை பராமரியுங்கள்!

பான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா?
பிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..!
மனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி
83 சதவீத அபராதம்.. ஆடிப்போன கருப்பு பண ஆசாமிகள்..!

பணமதிப்பிழப்பின் வெற்றி: அரசு நேரடி கண்காணிப்பில் 18 லட்சம் பேர்..!

 
சென்னை: வருமான வரி தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து Scrutiny நோட்டீஸ் வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட் வாரண்ட் வந்துவிட்டது போல் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். scrutiny notice எனப்படும் கண்காணிப்பு கடிதம் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் போதுமானது.

வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துவிட்டால் அதற்காக பதற்றப்படாமல் பதில் அளிக்கலாம். அநாவசியமாக கண்டதையும் குழப்பிக்கொண்டு வருமான வரித்துறை கேட்காததை எல்லாம் அளித்து மாட்டிக்கொள்ளவேண்டாம்.

Scrutiny noticeஇல் கேட்கப்பட்ட ஆவணங்களை தயார் செய்வதற்கு போதுமான கால அவகாசத்தையும் நாம் கேட்டு பெற்றுக்கொண்டு அவற்றை முழுமையாக அலசி தயார் செய்த பின்பு அவற்றை வருமான வரித்துறைக்கு அளிக்கலாம்.


 
வருமான வரி நோட்டீஸ்
வருமான வரி நோட்டீஸ்
ஒரு காலத்தில் நமக்கு தந்தி வந்தாலே அதில் என்ன இருக்கும் என்பதை படித்துப் பார்க்காமலே நமக்கு காய்ச்சல் வரும் அளவுக்கு எதை எதையோ கற்பனை செய்துகொண்டு பிரித்து படித்தால் பெரிதாக இருக்காது. அதுபோலத்தான் வருமான வரித்துறையின் scrutiny notice வந்தாலும் அவஸ்தைப்படுவோம்.

ஆவணங்கள் உண்மைதானா?
 à®¨à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®¸à¯ எந்த வகை
ஆவணங்கள் உண்மைதானா?
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் அனைவருக்கும் Scrutiny notice அனுப்பப்படுவதில்லை. நாம் ரிட்டன் தாக்கல் செய்த போது அளித்த தகவல் மற்றும் ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் மட்டுமே, நாம் ஏற்கனவே அளித்துள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும் மதிப்பீடு செய்யவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

நோட்டீஸ் எந்த வகை
 

நோட்டீஸ் எந்த வகை
வருமான வரி தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.Scrutiny நோட்டீஸ் வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட் வாரண்ட் வந்துவிட்டது போல் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். முதலில் இந்த நோட்டீஸ் இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விவரங்களை மட்டும் கோருவது limited வகை நோட்டீஸ். முழுமையான ஆவணங்கள் மற்றும் விவரங்களைக் கோருவது complete வகை நோட்டீஸ். இதில் எந்த வகையான நோட்டீஸ் வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து முறையாக பதில் அளிக்க வேண்டும்.
 
கால அவகாசம்
  இ-ப்ரொசீடிங்
கால அவகாசம்
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் Scrutiny நோட்டீஸ் அனுப்பப்படும். உதராணமாக, 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் (Individual) 2018ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டால் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நோட்டீஸ் வரவேண்டும். இந்த அவகாசத்திற்குள் நோட்டீஸ் வந்திருக்கிறதா என்பதை நோட்டீஸில் உள்ள தேதியைப் பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். அந்த அவகாசத்தில் இல்லை என்றால் அதை வருமானவரி அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
 
 -ப்ரொசீடிங்
 
-ப்ரொசீடிங்
பொதுவாக Scrutiny நோட்டீஸ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக அவருடைய கணக்குத் தணிக்கையாளரோ (Auditor) நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த நடைமுறையை எளிமையாக்க, ‘e-proceeding' என்ற வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்கள் மட்டும் கோரும் நோட்டீஸ்களுக்கு இந்த வருமானவரித்தறை இணையதளத்தின் மூலமும் பதில் அளிக்கலாம்.

 மதிப்பீட்டு ஆண்டு, நிதி ஆண்டு
 
மதிப்பீட்டு ஆண்டு, நிதி ஆண்டு
எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களைத் தயார் செய்ய முடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது தவறாமல் பான் எண் மற்றும் எந்த நிதி ஆண்டு, எந்த மதிப்பீட்டு ஆண்டு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 

நேரில் ஆஜர்
 
நேரில் ஆஜர்
நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால் குறித்த தேதிக்குள் நேரில் ஆஜராகிவிட வேண்டும். இல்லையென்றால் வீண் அபாரதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆவணங்களை பரிசோதிக்கும் வருமானவரி அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை ஏற்கவும் மறுக்கவும் சாத்தியம் உண்டு என்பதால் எப்போதும் சரியான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

No comments: