சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, March 2, 2019

சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்!


 


 *🔰2009  & TET ஆசிரியர்களின் ஒன்றியப்பொருப்பாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து அரசு நியாயமான கோரிக்கை என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டதே தவிர கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதால் 2009 மற்றும் TET ஆசிரியர்கள் அனைவரும் மன உலைச்சலில் இருப்பதனால் வேறு வேலையை தேடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.*

*🔰அந்த வரிசையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேட்டை ஒன்றியத்தை சார்ந்த இடைநிலை ஆசிரியரும் உளுந்தூர்பேட்டை ஒன்றிய 2009 & TET ஆசிரியர்களின் ஒன்றியப்பொருப்பாளருமாகிய வடகுறும்பூர் அரசுப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் பலதுறைகளில் வேலை தேட ஆரம்பித்தார்.*

*🔰தற்போது அவருக்கு காவல்துறையில் விரல்ரேகைப்பதிவு ஆய்வாளராக பணிஆணையை பெற்று இடைநிலை ஆசிரியர் பணியை துறந்துள்ளார்.*

*🔰நமது அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் திறமையான இடைநிலை  ஆசிரியர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.*

*🔰இது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க 2009 & TET  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய  முரண்பாட்டுப் பிரச்சனையான சமவேலை சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கையை விரைவாக நிறைவேற்றி இடைநிலை ஆசிரியர்கள் வேறு துறையை தேர்ந்தெடுப்பதை தடுக்கும் வகையில் விரைந்து நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.*

*🔰சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி 21ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டுமாய் நம் அரசினை கேட்டுக்கொள்கின்றோம்!*

*இப்படிக்கு*
*விழுப்புரம் மாவட்ட 2009 & TET ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு*

No comments: