எந்தெந்த உணவுகள் கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 3, 2019

எந்தெந்த உணவுகள் கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது!!!



மனித உயிரை காவு வாங்கும் கேன்சரில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தால் மிகவும் நல்லது. எந்தெந்த உணவுகள் கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது என்பதைக் கீழே காணலாம்.

* குளிர்பானங்களில் நிறத்திற்காக கலக்கப்படும் சோடாக்கள் கேன்சருக்கு வழி காட்டுகின்றன. தாகத்திற்கு இதற்கு பதில் மக்கள் குளிர்ந்த நீர், மோர் அல்லது நிறமில்லாத சோடாக்களை கூட பயன்படுத்தலாம் .

* பொதுவாகவே கிரில் செய்யப்பட்ட உணவுகள் பலரின் பிடித்த லிஸ்டில் இடம்பெற்றிருக்கும். தனித்துவமான அதன் சுவை பலர் அடிமைகளாவே இருக்கின்றனர். ஆனால் கிரில் செய்ய அதிக அளவு வெப்பம் கேன்சரை உருவாகும் ஹைட்ரொகார்பன்களை உண்டாக்குகிறதாக கூறப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதும் நல்லது. அதற்கு பதில் வேகவைத்த மாமிசம் அல்லது குறைந்த எண்ணெய் விட்டு சமைக்கப்பட்ட மாமிசம் பாதுகாப்பானது.
* அதிக கொழுப்பு உள்ள எண்ணையில் பொறிக்கப்படும் இந்த உருளை கிழங்கு சிப்ஸ் கூட கேன்சருக்கு வழிவகுக்கிறதாம். இதற்கு பதில் வேகவைத்து பொறித்த வாழைப்பழம் அல்லது காய்கறி சிப்ஸ் சிறந்தது.

* மது நாட்டிற்கும் வீட்டிற்கும் மட்டும் அல்ல மனிதனின் உடல் நலத்திற்கும் கேடு தான். முக்கியமாக தலை, நுரையீரல், மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் உண்டாகும் கேன்சருக்கு குடி பழக்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மது பழக்கம் உங்கள் உயிரை எல்லா வகையிலும் பழிவாங்கும் என்பதை மறக்காதீர்கள்.

No comments: