'மை' வைக்க போகும் உதவி பேராசிரியர்கள்:
'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்ற, கல்லுாரி உதவி பேராசிரியர் பலருக்கு, ஓட்டு சாவடியில், வாக்காளர் விரலில் மை வைக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், நொந்து போயுள்ளனர்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் பணிக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் என அவர்களின் சம்பளம் விகிதம் மற்றும் பதவிகள் அடிப்படையில், தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், இதுவரை உதவி பேராசிரியர்களுக்கு, ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரி பணியும், அவர்களுக்கு கீழ், போலிங் ஆபிசர் (பி.ஓ.,) - 1, 2 மற்றும், 3 என்ற நிலைகளில் பணிகள் ஒதுக்கப்படும்.பி.ஓ., 3 என்ற நிலையில், சம்பளம் விகிதம் அடிப்படையில், பெரும்பாலும் அங்கன்வாடி பணியாளருக்கு ஒதுக்கப்படும். அவர்கள் ஓட்டளிக்க வருவோரின் விரலில் மை வைப்பர்.ஆனால் இந்தாண்டு, ஏப்., 18ல் நடக்கவுள்ள தேர்தலில், உதவி பேராசிரியர்கள் பலருக்கு, பி.ஓ., 2 மற்றும் 3 நிலையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே ஓட்டுச் சாவடியில், அங்கன்வாடி பணியாளர் நிலையில் உள்ளவர்களுக்கு, உதவி பேராசிரி யருக்கும், மேல்நிலையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:சம்பளம் அடிப்படையில் தலைமை அதிகாரி பணியே, இதுவரை ஒதுக்கப்பட்டது. ஒரு, பி.ஓ., தான் ஓட்டுச் சாவடிக்கு முழு பொறுப்பாக இருப்பார்.அனைத்து நிலையிலும் உள்ள பணிகள் விவரம், அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பலருக்கும், விரலில் மை வைக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில், கல்லுாரி உதவி பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். அதை மனதில் வைத்து, வேண்டு மென்றே எங்களுக்கு, இதுபோன்ற பணி ஒதுக்கி, அரசு பழிவாங்குகிறது. இந்த விவகாரத்தை, தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments
Post a Comment