லோக்சபா தேர்தல் அறிவிப்பு எப்போது?
லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.பதினாறாவது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 3ல் முடிகிறது.
அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் 17வது லோக்சபாதேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.
2014ல் லோக்சபா தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில்ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
No comments
Post a Comment