டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்ற என்ஓசி தேவையில்லை: ஆர்டிஓ அதிகாரிகள் தகவல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, March 4, 2019

டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்ற என்ஓசி தேவையில்லை: ஆர்டிஓ அதிகாரிகள் தகவல்



டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்றம் செய்ய இனி  தடையில்லா சான்றிதழ் (என்..சி.,) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சாலை போக்குவரத்து விதிகளின் படி ைபக், பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து துறை பல்வேறு படிநிலைகளுக்கு பிறகு டிரைவிங் லைசென்ஸ் வழங்குகிறது.


 வாடகை அல்லது பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு வீடு மாறுவது உண்டு. அப்போது அவர்கள் டிரைவிங் லைசென்சில் உள்ள பழைய முகவரியை மாற்ற வேண்டும்.
 
அதற்கு ஏற்கனவே லைசென்ஸ் பெற்ற ஆர்டிஓ அலுவலகத்தில்  என்..சி. எனப்படும் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன் பிறகே முகவரியில் மாற்றம் செய்து கொடுக்கப்படும்.

 இந்த நடைமுறையில் ஏராளமான சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆர்டிஓ அலுவலகங்கள் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.


 ஏற்கனவே லைசென்ஸ் பெற்றவர்களின் முழு விபரமும்சாரதிஎன்ற சாப்ட்வேரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இதனால் தற்போது முகவரியில் மாற்றம் செய்யும் போதுஎன்ஓசிசான்று சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 போக்குவரத்துத்துறையில்சாரதிஎன்ற சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது என்..சி., சான்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்தவாரம் புதுடில்லியில் உள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனைத்து தலைமை போக்குவரத்து செயலாளர்கள், கமிஷனர்களுக்கு அனுப்பியது.

அதில், சம்மந்தப்பட்ட சாப்ட்வேரை சுட்டிக்காட்டி, அதிகாரிகள் என்..சி., சான்றிதழை, வாகன ஓட்டிகளிடம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் எளிதாக தங்களது லைசென்ஸில் முகவரி மாறுதல் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்


No comments: