தேர்தல் நடத்தை விதிமீறலை புகார் செய்ய 'சி - விஜில்' என்ற, மொபைல் போன் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறலை படம் பிடிக்க, 'சி - விஜில்' என்ற, மொபைல் போன் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள, இந்த செயலியை, இரண்டு நாட்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்வோர், தங்கள் பெயர், மொபைல் போன் எண், தொகுதி,மாவட்டம், மாநிலம் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும், குறியீட்டு எண் அனுப்பப்படும். அதை பயன்படுத்தினால், செயலி இயங்கும்.இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில், இந்த செயலி இயங்குவதால், வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், தாங்கள்இருக்கும் இடத்திலேயே, தேர்தல் விதிமீறல்களை கண்டுபிடித்து, தகவல் அனுப்பலாம்.
நடத்தை விதிகள் மீறப்படும் இடங்களில், புகைப்படம் மற்றும் வீடியோவாக செயலியில் எடுக்கலாம். அது, உடனடியாக தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும்.அங்கிருந்து, ஒன்றரை மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட பறக்கும் படைக்கு தகவல் வந்து விடும்.பின், நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment