ஆசிரியர் தேர்வுக்கான இணையதளம் முடக்கம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, March 6, 2019

ஆசிரியர் தேர்வுக்கான இணையதளம் முடக்கம்



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளம், நாள் முழுவதும் முடங்கியதால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் என்ற, ராணுவ பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.., தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, பட்டதாரிகள், மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான, 'சிடெட்' ஜூலை, 7ல் நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு,www.ctet.nic.inஎன்ற இணையதளத்தில், பிப்., 5ல் துவங்கியது. விண்ணப்பத்தை பதிவு செய்ய நேற்று கடைசி நாள்.இந்நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால், நேற்று அதிகாலை முதல், 'சிடெட்' இணையதளம் முடங்கியது. யாராலும் ஆன்லைன் பதிவு செய்ய முடியவில்லை.
மாலையில் சில நிமிடங்கள் இணையதளம் இயங்கினாலும், பதிவு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என, பட்டதாரிகள் கூறினர். எனவே, விண்ணப்ப பதிவுக்கு, ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments: