தமிழக காவல்துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர் வேலை
தமிழக காவல்துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர் வேலை
tnpolice
969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மார்ச் 20-ஆம் தேதி முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக இந்த தேர்வு குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வு எழுத விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல்
ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்வு உதவி மையங்கள் இம் மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இந்த
உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890
35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments
Post a Comment