மத்திய அரசு ஊழியர்கள் பணியில் மேற்படிப்பு முடித்தால் 5 மடங்கு ஊக்கத்தொகை
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருந்துக்கொண்டே
மேற்படிப்பு முடித்தால் அவர்களுக்கு ஒரே முறை 5 மடங்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு ெதரிவித்துள்ளது. மத்திய பணியாளர் நல அமைச்சகம் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாத ஊக்கத்தொகை தொடர்பாக உத்தரவை பிறப்பித்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மேற்படிப்பு படித்து புதிய தகுதியை
பெற்றால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ₹2000 முதல் அதிகபட்சமாக ₹10,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஊக்கத்ெதாகையை 5 மடங்காக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய பணியாளர் நலத்துறை
உத்தரவிட்டுள்ளது.
இந்த
உத்தரவின்படி, குறைந்தபட்ச ஊக்கத்தொகை ₹10 ஆயிரமாகவும், அதிகபட்சமாக ₹30 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மூன்று ஆண்டு அல்லது அதற்கு குறைவான கால அளவில்
பட்டப்படிப்பு அல்லது
டிப்ளமோ படிப்பை முடித்திருந்தால் ₹10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு கால பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹15 ஆயிரம்
வழங்கப்படும். ஒரு ஆண்டு அல்லது அதற்கு குறைவான கால
முதுகலை பட்ட மேற்படிப்போ அல்லது டிப்ளமோவோ முடிந்திருந்தால் ₹20 ஆயிரம் வழங்கப்படும். ஓரு ஆண்டுக்கும் மேலான முதுகலை பட்டமேற்படிப்பு
படித்திருந்தால் அவர்களுக்கு ₹25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். பிஎச்டி அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்தால் அந்த ஊழியர்களுக்கு ₹30 ஆயிரம் ஊக்கத்தொகையாக தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கலை
மற்றும் இலக்கியத்தில் மேற்படிப்பு முடித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது. ஊழியர்கள் பணிபுரியும் துறை ரீதியான பாடப்பிரிவில் மட்டுமே
மேற்படிப்பு படித்திருக்க வேண்டும்.
No comments
Post a Comment