நேற்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு பின்பு 08.04.2019-க்கு ஒத்திவைப்பு.
ஜாக்டோ ஜியோ வழக்கு 25.03.2019 விசாரணைக்கு வந்தது.
1. அரசு தரப்பில் நமது கோரிக்கைகளுக்கு lமீண்டும் பதில் தர 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.
2. போராட்ட காலத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுநாள்வரை மீளப் பணியமர்த்தப்படாத மீன்வளத்துறை ஊழியர் திரு. சின்னச்சாமி அவர்களை மீளப் பணியமர்த்துவது குறித்த அறிக்கையினை வழக்கின் அடுத்த விசாரணையில் அரசு தரப்பு தாக்கல் செய்யும்.
3. 17பி குற்றச்சாட்டு பெற்று வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுவோரின் பட்டியலைப் பெற்று, அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக தமிழக அரசு அடுத்த விசாரணையில் தனது பதிலை தாக்கல் செய்யும்.
4. அடுத்தகட்ட விசாரணையின்போது இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கும் மீன்வளத்துறை ஊழியரை மீளப் பணியமர்த்துவது, 17பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்வது, பணிமாறுதல்களை இரத்து செய்வது, வேலைநிறுத்த காலத்தில் மறுக்கப்பட்ட ஊதியம்
ஆகியவை தொடர்பாக,
வரும் 8.4.2019 அன்று அடுத்த கட்ட விசாரணையின் போது
பரிசீலிக்கப்படும்
என நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இவண்
ஜாக்டோ ஜியோ
No comments
Post a Comment