பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.03.19
* இஸ்ரோவில், கட்டணமின்றி படித்து வேலைவாய்ப்பை பெறலாம்,'' என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
* மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு.
* தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார்.
* நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் கிரிக்கெட் விருதுகளில் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ரிச்சர்ட் ஹாட்லீ விருது மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர், நேர்த்தியான பேட்டிங்குக்குரிய ரெட்பாத் விருது ஆகியவற்றை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தட்டிச் சென்றார்.
* தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
உலக
வானிலை தினம்
உலக
வானிலைச் சின்னம்
உலக
வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும். ஒவ்வொரு நாளும் மாறி வரும் வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
திருக்குறள்
அதிகாரம்:பயனில சொல்லாமை
திருக்குறள்:191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
விளக்கம்:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
பழமொழி
Books and
friends must be few but good
நமது
நண்பர்களும்,புத்தகங்களும் குறைவாக இருந்தாலும் நல்லதாக இருக்க வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை பெருக்கும்
2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க
உழைப்பேன்.
பொன்மொழி
ஒரு
வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.
- நெல்சன் மண்டேலா
பொது
அறிவு
1.சுதந்திர இந்தியாவில் முதல் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெற்றது?
17 ஏப்ரல் 1952
2. மக்களவையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
கணேஷ் வாசுதேவ மாவுலாங்கர்
ஒட்டுரக காய்கறிகள் வாங்குவதை தவிர்க்க
1. ஒவ்வொரு ஊரிலும் தக்காளியோ, கத்திரியோ வெவ்வேறு விதமாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணம், சுவை கொண்டது.
இன்று கிடைக்கும் கத்தரியெல்லாம் வீரிய ஓட்டுரக கத்திரி தானே!
இப்படியாக வெண்டைக்காய், மிளகாய் என ஒவ்வொரு பயிரிலும் பல ரகங்கள், பல குணங்கள் கொண்டவை அன்று கோலாச்சின.
2. அன்றெல்லாம் எந்தச்செடியில் காய்கறி சிறப்பாக இருக்கின்றனவோ அதை முத்தவிட்டு, விதையை எடுத்து சாணத்தில் புதைத்து பக்குவப்படுத்துவர். வைக்கோலில் இறுக கட்டிவைத்து பருவம் வந்ததும் எடுத்து விதைப்பார்கள்.
பசுந்தாள் உரமாக சணப்பை போடுவார்கள்!
வைரஸ் தாக்குதலைத் தடுக்க சோளச்சாறு, தேங்காய்பால் சாறு தெளிப்பார்கள். பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய், வேப்ப விதைச்சாறு பயன்படுத்துவார்கள். நாற்று அழுகலை கட்டுப்படுத்த கோதுமை தவிடு, மக்கிய மண் போதுமானதாக இருந்தது.
3. உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ்
அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது.
4. இது உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது. இத்தகைய விஷத்தன்மையுள்ள உணவுப்பொருட்களை அனைவரும் தவிர்த்திடுவோம்.
English
words and Meaning
Secular
உலகத் தொடர்பான
Random ,தற்செயலாகவிருப்பப் படி
Mindful. அக்கறையுள்ள, கவனமுள்ள
Scrub. துடைத்தல், தேய்த்துக் கழுவுதல்
Wearied. சோர்வான, களைப்பாக
அறிவியல் விந்தைகள்
*கொசுக்கள் 0 வகை இரத்தம் அதிகம் விரும்பும்
* கிவி, ஈமு, நெருப்பு கோழி மற்றும் பென்குயின்களால் பறக்க முடியாது
* காளான்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.
* விண்வெளியில் முதன் முதலில் வளர்க்கப் பட்ட தாவரம் உருளைக்கிழங்கு.
* எகிப்து பிரமீடை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு அப்போது முள்ளங்கிதான் சம்பளமாக கொடுக்கப் பட்டது.
Some
important abbreviations for students
*IST -
Indian Standard Time
* ITBP -
Indo-Tibet Border Police
நீதிக்கதை
ஒரு
ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ‘ என்று கேட்டனர்.
தந்தை ‘வாருங்கள்’ என்றார்.
‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.
குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.
ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.
ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.
பின்
மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.
அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.
உடன்
குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.
அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.
ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’
அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.
அன்பே சிவம்…அன்பே முக்கியம்.
இதையே வள்ளுவர்..
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.
No comments
Post a Comment