முடிந்தது பிளஸ் 2 தேர்வு: ஏப்.,19ல், 'ரிசல்ட்'
பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், ஏப்.,19ல் வெளியிடப்பட உள்ளன.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. இறுதியாக, நேற்று, உயிரியல், தாவரவியல்,வரலாறு, வணிக கணிதம், அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன.
அத்துடன், பிளஸ் 2வில் அனைத்து பாட பிரிவினருக்கும் தேர்வுகள் முடிந்தன.நேற்று நடந்த,உயிரியல் மற்றும் தாவரவியல் வினாத்தாள், எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இதற்கான தேர்வு முடிவுகள், லோக்சபா தேர்தலுக்கு மறுநாளான, ஏப்., 19ல் வெளியிடப்பட உள்ளன.
No comments
Post a Comment