ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, March 30, 2019

ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்


'தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது. இங்கு,பிளஸ் 2 முடித்தவர்கள்நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்எஸ்சி (வேதியியல், கணிதம், வாழ்வியல், இயற்பியல்) மற்றும் எம்ஏ (பொருளாதாரம்) படிப்புகளும், கணிதத்தில் 5 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட்படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த முதுகலை படிப்பில் தலா 30 பேரும், பிஎஸ்சி.பிஎட் படிப்பில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.
 
4 ஆண்டுகளில்...

இங்கு வழங்கப்படும் படிப்புகளில் பிஎஸ்சி,.பிஎட். படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக பிஎஸ்சி கணிதம் முடித்துவிட்டு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்படிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 12-ம்வகுப்பில் கணிதம், இயற்பியல்,வேதியியல் பாடங்களை படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஒருங்கிணைந்த படிப்புகள் உட்பட இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மே 25, 26-ம் தேதிகளில்அந்த வகையில், தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதி அன்று வெளியிடப்படும். ஒருங்கிணைந்த எம்எஸ்சி மற்றும் எம்ஏ படிப்புகள், ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பு உள்ளிட்ட இதர படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucetexam.in) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் வழங் கப்படும் பல்வேறு படிப்புகள் குறித்த விவரங்களை www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 04366 - 277337, 277261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்.

No comments: